TNPSC Thervupettagam

இந்தியச் சுற்றுச்சூழல் நிலவரம் குறித்த அறிக்கை

April 16 , 2023 842 days 336 0
  • அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மற்றும் டவுன் டு எர்த் ஆகியவை, சமீபத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியச் சுற்றுச்சூழல் நிலவரம் குறித்த ஒரு அறிக்கையினை வெளியிட்டது.
  • இதன்படி நாட்டில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.
  • இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1,50,000 டன் அளவில் நகராட்சிப் பகுதி சார்ந்த திடக் கழிவுகள் உருவாக்கப் படுகிறது.
  • இதில் பாதிக்கும் மேற்பட்டவை குப்பைக் கிடங்குகளில் கொட்டப் படுகின்றன அல்லது எந்தவொருச் செயல்முறைக்கும் உட்படுத்தப்படாமல் (கவனிப்பாரற்று) கிடக்கின்றன.
  • இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் இழக்கப்படும் சராசரி ஆயுட்கால இழப்பு நான்கு ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் ஆகும்.
  • ஹரியானாவில் நிலவும் சராசரி ஆயுட்கால இழப்பு ஏழு ஆண்டுகள் மற்றும் ஐந்து மாதங்கள் ஆகும்.
  • நான்கு மாதங்கள் என்ற அளவில் மிகக் குறைந்த அளவிலான ஒரு ஆயுட்கால வீழ்ச்சி லடாக்கில் பதிவாகியுள்ளது.
  • காற்று மாசுபாடு தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளால், நகர்ப்புறங்களை விட கிராமப்புறப் பகுதிகளில் தான் அதிக ஆயுட்கால இழப்புப் பதிவாகியுள்ளன.
  • இந்தியாவில் மேலும் 35 சதவீதப் பொது சுகாதார மையங்கள் தேவைப் படுகின்றன.
  • 2022 ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களுக்கு இடையே (304 நாட்கள்), இந்தியா 271 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்டது.
  • இந்தத் தீவிர வானிலை நிகழ்வுகளால் 2,900க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன.
  • ஐக்கிய நாடுகள் சபையினால் வலியுறுத்தப்பட்ட கட்டாய நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) பூர்த்தி செய்வதற்கான ஒரு ஒட்டு மொத்த உலகளாவியத் தர வரிசையில் இந்தியா ஒன்பது இடங்கள் சரிந்துள்ளது.
  • இந்தியாவில் சுற்றுச்சூழல் சார்ந்த குற்றங்கள் கட்டுப்பாடின்றி தொடர்ந்து வருகின்றன என்பதோடு, மேலும் கிடப்பில் உள்ள வழக்குகளை முடிக்க, நீதிமன்றங்கள் ஒவ்வொரு நாளும் 245 வழக்குகளுக்குத் தீர்ப்பளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்