TNPSC Thervupettagam

இந்தியச் சுற்றுலாப் புள்ளிவிவரம்

October 30 , 2020 1742 days 587 0
  • சுற்றுலா அமைச்சகமானது சமீபத்தில் இந்தியச் சுற்றுலாப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
  • அந்த அறிக்கையின்படி, உத்தரப் பிரதேசம் நாட்டிலேயே அதிக அளவில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தை அடுத்து  தமிழ்நாடும் ஆந்திரப் பிரதேசமும் இதில் உள்ளன.
  • தாஜ்மஹால் மற்றும் இந்தியா கேட் ஆகியவை உள்நாட்டுச் சுற்றுலாவிற்கான முக்கிய இடங்களாகும்.
  • கேரளா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இதர மாநிலங்களாகும்.
  • அதிக சுற்றுலாப் பயணிகளின் முதல் ஐந்து மூல நாடுகள் வங்கதேசம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இலங்கை மற்றும் கனடா ஆகியவையாகும்.
  • வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.
  • தமிழ்நாட்டை அடுத்து மகாராஷ்டிராவும் உத்தரப் பிரதேசமும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்