இந்தியத் திறன் மேம்பாட்டு பணியின் (Indian Skill Development Services - ISDS) முதலாவது பிரிவானது மைசூருவில் உள்ள நிர்வாகப் பயிற்சி நிறுவனத்தில் (Administrative Training Institute - ATI) தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
ISDS என்பது ஒரு புதிய மத்திய அரசுப் பணியாகும்.
நோக்கம்: இந்தப் பணியானது திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பயிற்சி இயக்குநரகத்திற்காக உருவாக்கப்பட்டது. இது ஒரு குரூப் ‘ஏ’ நிலை கொண்ட பணியாகும்.
யுபிஎஸ்சி அமைப்பால் நடத்தப்பட்ட இந்திய பொறியியல் பணித் தேர்விலிருந்து ISDS பிரிவில் சேரும் முதல் பணித் தொகுதி இதுவாகும்.