TNPSC Thervupettagam

இந்தியத் தேர்தல் ஆணையச் சீர்திருத்தங்கள் 2026

October 1 , 2026 6 days 69 0
  • உள் நிர்வாகம், தொழில்நுட்ப மேற்பார்வை மற்றும் வாக்காளர் பட்டியல் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஒன்பது முடிவுகளை அறிவித்தது.
  • கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் முன்கூட்டியே சுற்றறிக்கையாக விடப்படும், குறிப்புகள் பதிவு செய்யப்படும், மேலும் ECI அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆணையத்தின் ஒப்புதல் தேவைப்படும்.
  • புதிய தகவல் தொழில்நுட்ப (IT) தொகுதிகள் மற்றும் டிஜிட்டல் இணையதளங்கள் குழு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் அதே நேரத்தில் ஒரு சுயாதீன இந்தியத் தொழில்நுட்பக் கழக (IIT) அல்லது இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழக (IIIT) நிபுணர் ECINet-ஐ மதிப்பாய்வு செய்வார்.
  • கள அதிகாரிகளுக்கு வாக்காளர் பட்டியல் பணிகளுக்காக கூடுதல் அமைப்பு அணுகல் வழங்கப்படும், மேலும் தேர்தல் ஆணையர்கள் வழங்கும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.
  • கோவாவில், படிவம் 6-ஐ சமர்ப்பித்த சரிபார்க்கப்பட்ட 81 வாக்காளர்களைச் சேர்ப்பதற்கு வசதி செய்யுமாறு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ECI உத்தரவிட்டு உள்ளது.
  • வாக்காளர் பதிவு விதிகளின் கீழ் உள்ள படிவம் 6-ஐ சிறப்பு தீவிர திருத்த காலத்திற்கு வெளியேயும் பயன்படுத்தலாம் என்று ECI தெளிவுபடுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்