இந்தியத் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு
March 7 , 2023 891 days 401 0
ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான ஒரு பதவிக் காலத்திற்கு ஒரு தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடைமுறையானது தெளிவான ஒரு சட்ட மீறல் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமிப்பது குறித்து விவாதிக்கும் போது நீதிமன்றத்தின் இந்த ஆய்வு முன் வைக்கப்பட்டது.
கோயல் அவர்களின் நியமனம் ஆனது கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியன்று மேற் கொள்ளப்பட்ட நிலையில் அவரின் பதவிக் காலமானது ஐந்து ஆண்டுகளுக்குச் சற்றும் கொஞ்சம் அதிகம் ஆகும்.
1991 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையர்களின் பணி நிலைகள் மற்றும் செயல்பாடு) என்ற சட்டத்தின் 4(1)வது பிரிவின் படி, தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் ஆணையர்கள் என தனித்தனியாக ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும்.