இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி C. சுப்பிரமணியம்
February 15 , 2025 207 days 282 0
செங்கல்பட்டின் செய்யூர் தாலுக்காவில் உள்ள இல்லேடு கிராமத்தில் உள்ள தேசிய வேளாண் அறக்கட்டளையின் (NAF) கிராமப்புற மேம்பாட்டு மைய வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் C. சுப்பிரமணியம் அவர்களின் சிலை திறக்கப்பட்டு உள்ளது.
NAF அறக்கட்டளையானது C. சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பட்டது.
அவர் மத்திய வேளாண் அமைச்சராக பதவியேற்ற போது, 1965-66 ஆம் ஆண்டில் பல வட மாநிலங்களில் பெரும் வறட்சி ஏற்பட்டது.
அந்த நேரத்தில் தான் நார்மன் போர்லாக் அவர்கள், மெக்சிகோ நாட்டுக் கலப்பின ரக கோதுமையை உருவாக்கினார் என்பதோடு M.S.சுவாமிநாதன் மணிலாவிலிருந்து IR8 மற்றும் சோனாலிகா ரக விதைகளை வாங்கி அதில் அறிமுகப்படுத்தினார்.
C. சுப்பிரமணியம் அவர்கள் துணிந்து செயல்பட்டு, கலப்பின அரிசி மற்றும் கோதுமை விதைகளை வாங்கி நாடு முழுவதும் விநியோகித்தார்.
இதனால், 1971 ஆம் ஆண்டில், இந்தியா உணவு தானியங்களில் தன்னிறைவு பெற்றது.