இந்தியா முழுவதுமான பசுமைசார் திட்டங்களுக்கென கூடுதலாக 750 மில்லியன் பவுண்டு அளவிலான நிதியினை வழங்குவதற்கான “இந்தியப் பசுமை உத்தரவாதத்தை” உலக வங்கியிடம் இங்கிலாந்து வழங்க உள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP 26 உச்சி மாநாட்டில் இது குறித்து அறிவிக்கப் பட்டது.
பசுமை உத்தரவாத நிதியானது தூய்மையான எரிசக்தி, போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்ற துறைகளில் தூய்மையான மற்றும் நெகிழ்திறன் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் ஆதரவு அளிக்கும்.
வளர்ந்து வரும் நாடுகள் பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களுடையப் பொருளாதாரத்தை நிலையான முறையில் வளர்த்துக் கொள்ளவும் உதவும் வகையில் COP 26 உச்சி மாநாட்டில் "தூயப் பசுமை முன்முயற்சி" என்ற முயற்சி தொடங்கப் பட்டது.