தன்னளவில் முதல் ஆய்வு அறிக்கையான இந்தியப் பறவைகளின் நிலை – 2020 (State of India’s Birds 2020 - SoIB) என்ற ஒரு புதிய அறிவியல்சார் அறிக்கையானது 10 அமைப்புகளால் கூட்டாக வெளியிடப்பட்டுள்ளது.
ATREE, பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அறக்கட்டளை, இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு, இந்திய தேசியப் பல்லுயிர் ஆணையம், உயிரியல் அறிவியல் தேசிய மையம், SACON, வெட்லேண்ட்ஸ் இன்டர்நேஷனல், இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம்ஆகியவை இந்த 10 அமைப்புகளாகும்.
இது 867 இனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தரவுகள் பறவைக் கண்காணிப்பாளர்களால் நிகழ்நேரத் தளமான ஈபேர்ட் (e-Bird) என்ற தளத்தில் பதிவேற்றப்பட்ட தரவுகளின் உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
இந்த அறிக்கை தற்போது குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புலம்பெயர் வனவிலங்குகளுக்கான பாதுகாப்பு மீதான ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகளின் 13வது மாநாட்டின் போது வெளியிடப்பட்டது.