IUCN செந்நிறப் பட்டியல் ஆனது அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நான்கு இந்தியப் பறவை இனங்களின் அழிவு அபாயம் குறித்த தகவல்களைப் புதுப்பித்து உள்ளது.
கல் குருவி, பனங்காடை, கருஞ்சிவப்பு வால் வானம்பாடி மற்றும் நீளவாய் கதிர்க் குருவி உள்ளிட்ட நான்கு பறவைகளும் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம் மற்றும் அருகி வரும் நிலையில் உள்ள இனம் போன்ற அதிக அச்சுறுத்தல் வகைகளுக்கு மாற்றப்பட்டன.
இந்த நான்கு இனங்களும் புல்வெளிகள், பகுதியளவு வறண்ட நிலப்பரப்புகள், பாலைவனங்கள், பயிர் நிலங்கள், மலைப்பாங்கான புதர்க் காடுகள் மற்றும் தரிசு நிலங்கள் போன்ற திறந்த வெளி இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்து உள்ளன.
IUCN செந்நிறப் பட்டியலில் தற்போது உலகளவில் 172,620 இனங்கள் உள்ளன என்ற ஒரு நிலையில் அவற்றில் 48,646 இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன.