TNPSC Thervupettagam

இந்தியப் பாகுபாடு அறிக்கை 2022

September 21 , 2022 1031 days 627 0
  • ஆக்ஸ்ஃபாம் இந்தியா என்ற அமைப்பானது, 2022 ஆம் ஆண்டு இந்தியப் பாகுபாடு அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • இந்தியாவில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதமானது 2021 ஆம் ஆண்டில் வெறும் 25 சதவீதமாக உள்ளது.
  • இது 2004-05 ஆம் ஆண்டில் இருந்த 42.7 சதவீதத்தை விடக் குறைவு என்பதோடு பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் மிகக் குறைவான அளவாகும்.
  • இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் நிலவும் 98 சதவீத வேலை வாய்ப்பு இடைவெளிக்குப் பாலினப் பாகுபாடு தான் முக்கியக் காரணமாகும்.
  • ஒரு ஆணின் சராசரி ஊதியம் என்பது ஒரு பெண்ணின் ஊதியத்தை விட 2.5 மடங்கு அதிகமாகும்.
  • 2019-20 ஆம் ஆண்டில் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களில் 60 சதவீதம் பேர் தினசரி அடிப்படையில் ஊதியம் வருகின்ற மற்றும் சுயதொழில் வேலை வாய்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
  • அதே காலக்கட்டத்தில், அந்த வயதினரில் 19 சதவீதப் பெண்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது.
  • பாலின அடிப்படையிலான ஊதிய இடைவெளிகளைத் தவிர, சாதி  அடிப்படையிலான ஊதிய வேறுபாடுகளையும் இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • நகர்ப்புறங்களில் உள்ள பட்டியலிடப்பட்டச் சாதிகள் அல்லது பழங்குடியினரைச் சேர்ந்த தினசரி வேலைகளில் இருப்பவர்களின் சராசரி வருமானம் ரூ.15,312 ஆகும்.
  • பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பெற்ற ரூ.20,346 என்ற ஊதியத்தினை விட இது மிகக் குறைவாகும்.
  • பொதுப் பிரிவினரின் வருவாயானது பட்டியலிடப்பட்டச் சாதிகள் அல்லது பழங்குடிப்  பிரிவினரைச் சேர்ந்த சமூகங்களை விட 33 சதவீதம் அதிகமாகும்.
  • 2019-20 ஆம் ஆண்டில், நகர்ப்புறங்களில் வாழும் ஊதியம் பெறும் தொழிலாளர்களாக ஈடுபட்டுள்ள முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத தொழிலாளர்கள் இடையே நிலவும் 68% வேறுபாட்டிற்குப் பாகுபாடு தான் முக்கியக் காரணமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்