இந்தியப் பாறை மலைப்பாம்புகளின் எண்ணிக்கை குறித்த அறிக்கை 2024
December 14 , 2024 139 days 223 0
இந்தியப் பாறை மலைப்பாம்பு (பைத்தான் மொலுரஸ்) ஆனது, தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக வேளாண் பகுதிகள் மற்றும் பாறைகள் நிறைந்த மலையடிவாரங்களில் பெரும்பாலும் காணக் கூடியதாக இருந்தது.
இருப்பினும், தன் வாழ்விட இழப்பு காரணமாக, மோயார் பள்ளத்தாக்கு தவிர, மாநிலம் முழுவதும் இந்த இனங்கள் குறைந்து விட்டதாக நம்பப்படுகிறது.
இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் "அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனமாக" வகைப்படுத்தப் பட்டுள்ளது.
2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், MTR, STR மற்றும் பவானி சாகர் ஆகிய இடங்களில் குறைந்த பட்சம் 80 பாறை மலைப் பாம்புகள் இருந்தன.
பாறை மலைப்பாம்புகள் விஷமற்றவை என்பதோடு அவை பொதுவாக மனிதர்களின் பார்வையில் படுவதைத் தவிர்க்கின்றன.