இந்தியப் புத்தொழில் நிறுவனங்களுக்கான புத்தாக்க வாரம்- ஜனவரி 10 முதல் 16 வரை
January 9 , 2023 1086 days 487 0
தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது (DPIIT), இந்தியப் புத்தொழில் நிறுவனங்களுக்கான புத்தாக்க வாரக் கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொழில்முனைவோர், தொழில்முனைவோராக விரும்புவோர் மற்றும் அரசாங்க அதிகாரிகள், தொழில்துறை காப்பு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் போன்ற புத்தொழில் நிறுவனச் சூழல் அமைப்புடன் தொடர்புடையப் பங்குதாரர்களை உள்ளடக்கிய பிற செயலாக்க அமைப்புகளுக்கான அறிவுப் பகிர்வுக் கூட்டங்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும்.
தேசியப் புத்தொழில் தினமானது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட உள்ளது.