TNPSC Thervupettagam

இந்தியப் புலம்பெயர்வு அறிக்கை 2020-21

June 18 , 2022 1114 days 644 0
  • 2020-21 ஆம் ஆண்டின் இந்தியப் புலம்பெயர்வு அறிக்கையானது சமீபத்தில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டது.
  • பெருந்தொற்றானது நகர்ப்புற இந்தியாவில் இருந்து 51.6 சதவீத ஆண்களைக் கிராமப் புறத்தில் உள்ள தங்களது  வீடுகளுக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தியுள்ளன.
  • கிராமத்திலிருந்துக் கிராமத்திற்குப் புலம்பெயரும் ஆண்களின் இடம்பெயர்வு அளவு என்பது 44.6 சதவீதமாக உள்ளது.
  • திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் கணவர் வீட்டிற்கு இடம் பெயர்வதால் கிராமப் புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு புலம்பெயரும் பெண்களின் இடம் பெயர்வு அளவானது 88.8 சதவீதமாக உள்ளது.
  • மற்ற நாடுகளில் இருந்து கிராமப்புறங்களுக்குப் புலம்பெயரும் ஆண்களின் எண்ணிக்கையானது நகர்ப்புறங்களில் உள்ள 2.3 சதவீதத்திற்கு மாற்றாக 3.9% ஆக இருந்தது.
  • கிராமப்புற இடம்பெயர்வு விகிதம் ஆனது 6.5 சதவீதமாகவும், நகர்ப்புற இடம்பெயர்வு விகிதம் ஆனது 34.9 சதவீதமாகவும் உள்ளது.
  • மொத்த இடம்பெயர்வு விகிதம் 28.9 சதவீதம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்