TNPSC Thervupettagam

இந்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு புள்ளிவிவரங்கள் 2020-21

March 16 , 2022 1182 days 577 0
  • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 2020-21 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு புள்ளி விவரங்களை வெளியிட்டார்.
  • இது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தின் வருடாந்திர வெளியீடு ஆகும்.
  • இது இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறையின் ஒரு ஒட்டு மொத்தக் கண்ணோட்டத்தினை வழங்குகிறது.
  • இந்தியா தனது கச்சா எண்ணெய்த் தேவையில் கிட்டத்தட்ட 85 சதவீதத்தை இறக்குமதி மூலம் பெறுகிறது.
  • எனவே, 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்களுக்கான தன்னிறைவு விகிதமானது 15.6% ஆக இருந்தது.
  • தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகும்.
  • இந்தியா தனது 54% அளவிற்கு இயற்கை எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இறக்குமதியைச் சார்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்