இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனைகள் – டோக்கியோ ஒலிம்பிக்கிற்குத் தேர்வு
April 15 , 2021 1550 days 885 0
நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ள முதல் இந்திய இளம் பெண் மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக் ஆவார்.
இவர் ஹரியானாவைச் சேர்ந்த இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனையாவார்.
ஹரியானாவைச் சேர்ந்த அன்சு மாலிக் என்பவரும் இப்போட்டிக்குத் தேர்வான மற்றொரு பெண் மல்யுத்த வீராங்கனையாவார்.
இருவரும் கசகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வினேஷ் போகத் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வாகியுள்ளார்.
அதிகாரப்பூர்வமாக XXXII ஒலிம்பியாய்டு போட்டிகள் மற்றும் 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் (அ) டோக்கியோ 2020 எனஅழைக்கப்படும் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒரு சர்வதேச பலதரப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வாகும்.