இந்தியப் பெருங்கடலில் மாபெரும் ‘புவி ஈர்ப்புத் துளை’
July 12 , 2023 774 days 459 0
இந்தியப் பெருங்கடலில் உள்ள மாபெரும் புவி ஈர்ப்புத் துளை குறித்த இரகசியங்களை இந்திய அறிவியல் கழக ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இது இந்தியப் பெருங்கடல் புவிக்கோள தாழ்நிலை (IOGL) என அழைக்கப் படுகிறது.
இது 1948 ஆம் ஆண்டில், நெதர்லாந்து நாட்டின் புவிசார் இயற்பியலாளர் பெலிக்ஸ் ஆன்ட்ரிஸ் வெனிங் மெய்னெஸ் என்பவரால் இலங்கைக்குத் தெற்கே, கண்டுபிடிக்கப் பட்டது.
இது இரண்டு மில்லியன் சதுர மைல்களை உள்ளடக்கியதோடு மற்றும் பூமியின் மேல் அடுக்கிற்குக் கீழே சுமார் 600 மைல் ஆழத்தில் அமைந்துள்ளது.
இந்த மாபெரும் தாழ்நிலையானது, சராசரியை விட கணிசமான அளவில் குறைந்த ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ளது.
இதன் மேல் கவச அடுக்கில் இருந்து உள்கவச அடுக்கு வரை மிருதுவானப் பொருட்கள் இருப்பதால், இந்தப் பகுதியில் ஈர்ப்பு விசை குறைவாக உள்ளது.
இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் உள்ள இந்தக் கவச அடுக்கு அமைப்பானது, நீண்ட காலத்திற்கு முன்னதாக அழிந்து போன டெத்திஸ் என்ற பெருங்கடலின் கடற்பரப்பின் எஞ்சியப் பகுதிகளால் உருவாக்கப் பட்டிருக்கலாம் என கருதப் படுகிறது.