TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு 2026

February 25 , 2026 2 hrs 0 min 23 0
  • விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 9வது தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பெருங்கடல் கடற்படைக் கருத்தரங்கின் (IONS) தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டது.
  • 16 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்லாந்திடமிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்தியா, இரண்டு ஆண்டு காலத்திற்கு IONS அமைப்பை வழி நடத்தும்.
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடற்படைகளுக்கு இடையே கடல்சார் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக 2008 ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையால் IONS தொடங்கப் பட்டது.
  • பிலிப்பைன்ஸ் ஒரு பார்வையாளர் நாடாக அனுமதிக்கப்பட்டது என்பதோடு மேலும் ஓமன் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்திற்கான பணிக் குழுவில் (HADR) இணைந்தது.
  • IONS தற்போது 25 உறுப்பினர் கடற்படைகளையும் 9 பார்வையாளர் நாடுகளையும் கொண்டுள்ளது என்பதோடு தலைமைப் பதவி ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் சுழற்சி முறையில் மாற்றப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்