இந்தியாவினை பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான தொலை நோக்குத் திட்டம்
September 21 , 2024 312 days 241 0
இரண்டாவது சர்வதேசப் பசுமை ஹைட்ரஜன் மாநாடானது (ICGH-2024) டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, அதன் பயன்பாடு மற்றும் அதன் ஏற்றுமதிக்கான ஒரு உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்ற செய்வதற்கான ஒரு இலட்சிய மிகு இலக்கு ஆனது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் என்பது, இந்த இலட்சிய இலக்கினை நடைமுறையாக்குவதற்கான ஒரு முக்கியமானப் படிநிலையாகும்.
இந்தியாவின் புதைபடிவம் சாரா எரிபொருள் திறன் ஆனது கடந்த பத்தாண்டுகளில் சுமார் 300% அதிகரித்துள்ளது.
அதே காலக்கட்டத்தில் சூரியசக்தி சார்ந்த ஆற்றல் உற்பத்தி திறன் ஆனது வியக்கத் தக்க வகையில் 3000% வளர்ச்சியைக் கண்டுள்ளது.