அமெரிக்க அறிவியலாளர்கள் கூட்டமைப்பின் (FAS) 2026 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, இந்தியாவிடம் சுமார் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப் பட்டு உள்ளது.
இந்தியாவிடம் செயல்பாட்டில் உள்ள ஏவுகணைகளுக்கு 160-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களும், உற்பத்தியில் உள்ள புதிய எறிகணைகளுக்கு சுமார் 30 கூடுதல் அணு ஆயுதங்களும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
140 முதல் 225 அணு ஆயுதங்களுக்குத் தேவையான இராணுவ-தர புளூட்டோனியத்தை இந்தியா உற்பத்தி செய்திருக்கலாம் என்று FAS மதிப்பிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவிடம் சுமார் 730 கிலோ ஆயுத தரத்திலான புளூட்டோனியம் இருந்ததாக மதிப்பிடப்பட்டது.
அணு ஆயுதங்களைப் பொறுத்தவரையில், நம்பகமான குறைந்தபட்ச தடுப்பு மற்றும் முதலில் பயன்படுத்துவதில்லை (NFU) என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது.