ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) 2026 ஆம் ஆண்டிற்கான அறிக்கையானது, இந்தியாவின் மதிப்பிடப்பட்ட 190 அணு ஆயுதங்களில் 12 ஆயுதங்களை "செயல்பாட்டு ரீதியாக நிலை நிறுத்தப்பட்டவை" என வகைப்படுத்தியுள்ளதுடன் இந்தியாவின் அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு சிறிய பகுதி அதிக தயார் நிலையில் இருப்பதைக் குறிக்கிறது.
12 இந்திய அணு ஆயுதங்கள் தற்போது ஏவுகணை அமைப்புகளுடன் "செயல்பாட்டு ரீதியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளன" என்றும் அவை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும் SIPRI தெரிவித்துள்ளது.
இது இந்தியாவின் "No First Use" (NFU) என்ற அணுசக்தி கோட்பாட்டிலோ அல்லது நம்பகமான குறைந்தபட்ச தடுப்புக் கொள்கையிலோ எந்த மாற்றத்தையும் குறிக்கவில்லை.
செயல்பாட்டு ரீதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பது ஏவுகணைகள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற அமைப்புகளுடன் ஆயுதங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது.
இந்த முன்னேற்றமானது, இந்தியாவின் அணுசக்தி முக்கோணத்தை, குறிப்பாக அரிஹந்த் வகுப்பு அணுசக்தி உந்துவிசை எறிகணை நீர்மூழ்கிக் கப்பல்களை (SSBN) வலுப்படுத்துவதோடு தொடர்புடையதாகும்.