இந்தியா உலகின் 6வது பெரிய அணு உலை தொகுப்பினை இயக்குகிறது.
2024–25 ஆம் ஆண்டில் மொத்த மின்சார உற்பத்தியில் அணுசக்தி சுமார் 3.1% பங்களிக்கிறது.
தற்போதைய நிறுவப்பட்ட அணுசக்தி திறன் 8.78 GW ஆகும்.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நுட்பம் சார்ந்த அழுத்தப்பட்ட கன நீர் உலை (PHWR) தொழில்நுட்பம் தற்போது 700 மெகாவாட் உலைகளை ஆதரிக்கிறது.
புதிய 700 மெகாவாட் மற்றும் 1000 மெகாவாட் அணு உலைகளுடன், 2031–32 ஆம் ஆண்டிற்குள் அவற்றின் திறன் 22.38 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2047 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அளவிலான உற்பத்தித் திறனை அடைவதற்கான அணுசக்தி திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.