TNPSC Thervupettagam

இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு வளர்ச்சி

August 30 , 2026 18 days 139 0
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 உடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 12.4 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 729.3 பில்லியன் டாலர்களாக சாதனை படைத்துள்ளது.
  • இந்தியாவின் கையிருப்பில் மிகப்பெரிய அங்கமாக இருக்கும் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் (FCA) 9.4 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 591.3 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • அந்த வாரத்தில் தங்கத்தின் இருப்பு 2.8 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 114.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிறப்பு வரைவு உரிமைகள் (SDRs) 112 மில்லியன் டாலர்கள் உயர்ந்து 18.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் இருப்பு நிலை 26 மில்லியன் டாலர்கள் அதிகரித்து 4.9 பில்லியன் டாலர்களாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்