இந்தியாவின் அறிவியல் அருங்காட்சியக இயக்கத்தின் தந்தை
May 30 , 2025 58 days 154 0
தேசிய அறிவியல் அருங்காட்சியகச் சபையின் (NCSM) தலைமை ஸ்தாபன இயக்குநர் சரோஜ் கோஸ் காலமானார்.
கோஷ் 1979 முதல் 1997 ஆம் ஆண்டு வரை NCSM சபையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.
இந்தியாவின் அறிவியல் மையங்கள் மற்றும் இந்திய அருங்காட்சியகங்களின் வலை அமைப்பின் சிற்பியாக அவர் நினைவு கூரப்படுகிறார்.
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட NCSM ஆனது, 1978 ஆம் ஆண்டில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி சங்கமாக உருவாக்கப்பட்டது.
இது தேசிய அளவிலான ஏழு மையங்கள் உட்பட வடக்கு, தெற்கு, கிழக்கு, வடகிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் சுமார் 26 அறிவியல் மையங்கள் மற்றும் இன்ன பிற அருங்காட்சியகங்களை நிர்வகிக்கிறது.