காமராஜர் துறைமுகமானது 18 மீட்டர் வரைவு திறனைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமாக உருவெடுத்துள்ளது.
மூலதனத் தூர்வாரும் திட்டத்தின் ஆறாம் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, இந்த மைல்கல்லை இது எட்டியுள்ளது.
இந்தத் துறைமுகம் இப்போது 1,70,000 டெட்வெயிட் டன் (DWT) வரையிலான சரக்குகளை ஏற்றிச் செல்லும் கேப்சைஸ் (Capesize) ரகக் கப்பல்களைக் கையாளும் திறனைப் பெற்றுள்ளது.
18 மீட்டர் வரைவு திறன் என்பது, துறைமுகத்திற்குள் பெரிய மற்றும் ஆழமான கப்பல்கள் நுழைவதற்கு அனுமதிப்பதோடு, சரக்கு கையாளும் திறனையும் மேம்படுத்துகிறது.
18 மீட்டர் வரைவு திறனைக் கொண்ட இந்தியாவின் முதல் பெரிய துறைமுகம் விசாகப் பட்டினம் துறைமுகமாகும்.
முன்பு எண்ணூர் துறைமுகம் என்று அழைக்கப்பட்ட காமராஜர் துறைமுகம், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகில் அமைந்துள்ளதுடன் இதுவே இந்தியாவின் முதல் பெரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பெரிய துறைமுகமாகும்.