TNPSC Thervupettagam

இந்தியாவின் இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் தரவு

September 14 , 2026 15 hrs 0 min 21 0
  • இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வின் (ASUSE) 2025 ஆம் ஆண்டு தரவைப் பயன்படுத்தி, தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) இணைக்கப் படாத விவசாயம் அல்லாத துறைக்கான இந்தியாவின் முதல் மாவட்ட அளவிலான மதிப்பீடுகளை வெளியிட்டது.
  • இந்த மதிப்பீடுகள் 770 மாவட்டங்களில் 757 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் நிறுவனங்கள், தொழிலாளர்கள், பெண்களின் பங்கேற்பு மற்றும் மொத்த மதிப்பு கூட்டல் (GVA) குறித்த தரவுகளை உள்ளடக்கியுள்ளது.
  • இத்துறையின் நிறுவனங்கள், பணியாளர்கள் மற்றும் GVA ஆகியவற்றில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு முதல் 50 மாவட்டங்களில் உள்ளன.
  • 237 மாவட்டங்களில் பெண்கள் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களாக உள்ளனர் அதே நேரத்தில் 25 மாவட்டங்களில் அவர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.
  • 280 மாவட்டங்களில், ஒரு தொழிலாளருக்கான GVA அகில இந்திய சராசரியான ₹1,56,539-ஐ விட அதிகமாக உள்ளது.
  • இந்த ஆய்வு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியா முழுவதும் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பிற சேவைகளை உள்ளடக்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்