இந்தியாவின் இரண்டாவது பன்மய வண்ணத்துப் பூச்சி மையம்
October 25 , 2024 283 days 371 0
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நாம்தாபா தேசியப் பூங்காவிற்கு அடுத்தபடியாக, அசாம் மாநிலத்தின் காசிரங்கா தேசியப் பூங்காவானது இந்தியாவின் இரண்டாவது பன்மய வண்ணத்துப் பூச்சி மையமாக விளங்குகிறது.
வண்ணத்துப் பூச்சிகளின் பெரும் பாதுகாப்பு நிலையை அறிவதற்காக இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த வகையிலான முதலாவது வண்ணத்துப்பூச்சி வளங்காப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் பூங்காவில் 446க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் உள்ள 446 வண்ணத்துப் பூச்சி இனங்களில் 18 புதிய இனங்களாகும்.
இந்தத் தேசியப் பூங்காவானது அசாமில் கோலாகாட், சோனித்பூர், பிஸ்வநாத் மற்றும் நாகோன் மாவட்டங்களில் பரவியுள்ளது.
இந்தப் பூங்காவில் உலகின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கையிலான இந்தியக் காண்டாமிருகங்கள் உள்ளன என்பதோடு இந்தப் பூங்கா யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய தளமாக கருதப்படுகிறது.