கேரளாவிற்குப் பிறகு, கோவா மாநில அளவில் பறவைகள் பரவலை வெளியிட்ட இரண்டாவது இந்திய மாநிலமாக உருவெடுத்துள்ளது
இந்த அட்லஸ் வல்போயில் நடைபெற்ற கோவாவின் 9வது பறவைகள் விழாவின் போது வெளியிடப்பட்டது.
இது கட்டம் சார்ந்த ஆய்வுகளைப் பயன்படுத்தி பறவைகளின் பரவலைப் பட்டியல் இடுகிறது மற்றும் காலப்போக்கில் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் பெரும் மாற்றங்களைக் கண்காணிக்க உதவுகிறது.
இந்த முயற்சி பல்லுயிர்ப பாதுகாப்பு, குடிமக்கள் அறிவியல் மற்றும் சான்றுகள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தை ஆதரிக்கிறது.
'கோவாவின் பறவைகள்: கொங்கணிப் பெயரிடல் – ஒலாக் சுக்னயான்சி' என்ற துணை வெளியீடு, உள்ளூர் கொங்கணி மொழியில் பறவைகளின் பெயர்களை ஆவணப் படுத்துகிறது.