TNPSC Thervupettagam

இந்தியாவின் இரண்டாவது LNG விநியோக நாடு – ஐக்கிய அரபு அமீரகம்

January 24 , 2026 3 days 40 0
  • இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்திற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிற்கு ஆண்டுக்கு 0.5 மில்லியன் மெட்ரிக் டன் LNG வாயுவை வழங்கும்.
  • இது கத்தாருக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய LNG வழங்கீட்டு நாடாக ஐக்கிய அரபு அமீரகத்தினை மாற்றுகிறது.
  • LNG என்பது மின் உற்பத்தி, தொழில் மற்றும் சமையல் எரிவாயுவுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு தூய்மையான புதைபடிவ எரிபொருளாகும்.
  • இந்த ஒப்பந்தம் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது மற்றும் இந்தியாவின் எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்துகிறது.
  • வர்த்தகம், பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இந்த இரு நாடுகள் திட்டமிட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்