இந்திய AI தாக்க உச்சி மாநாடு 2026 இல் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகள் விளக்கப் பட்டன.
பெங்களூருவை தளமாகக் கொண்ட ஒரு புத்தொழில் நிறுவனமான சர்வம் AI, 22 இந்திய மொழிகளில் பன்மொழி மற்றும் குரல் அடிப்படையிலான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு AI மொழி மாதிரிகளை வெளியிட்டது.
Gnani.ai நிறுவனமானது ஒரு மில்லியன் மணி நேரத்திற்கும் அதிகமான இந்தியக் குரல் தரவுகளில் பயிற்சி பெற்ற உரைகளை பேச்சு வடிவில் அளிக்கும் (TTS) மற்றும் பேச்சுக்களை உரை வடிவில் அளிக்கும் (STT) மாதிரிகளை அறிமுகப்படுத்தியது.
பாரத்ஜென், 17 பில்லியன் அளவுருக்கள் கொண்ட பன்மொழி நிபுணர்களின் கலவை (MoE) அடிப்படை மாதிரியான PARAM 2 17B என்பதை வெளியிட்டது.