இந்தியா தனது 16வது இந்திய உடல் உறுப்பு தான தினத்தை அனுசரித்து சாதனை அளவிலான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சாதனைகளை முன்னிலைப் படுத்துவதுடன், உடல் உறுப்பு தானத்தை வலுப்படுத்த புதிய முயற்சிகளையும் தொடங்கியுள்ளது.
இந்தியா 2025 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 20,138 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதுடன் 2013 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 4,990 அறுவை சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில், இதுவே ஒரே ஆண்டில் நடைபெற்ற மிக அதிக அளவிலான அறுவை சிகிச்சையாகும்.
2023 ஆம் ஆண்டில் தேசிய டிஜிட்டல் உறுதிமொழி இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து, ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட உடல் உறுப்பு தான உறுதிமொழிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
மொத்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் 3வது இடத்தில் உள்ளதோடு மேலும் உயிருள்ள கொடையாளர்களின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியா உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ளது.
உடல் உறுப்பு தான சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்காக 'ஜக் ஜக் ஜியோ அபியான்' (Jug Jug Jiyo Abhiyaan), e-Pratyaropan டிஜிட்டல் தளம் மற்றும் தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) அலைபேசி செயலி ஆகியவற்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைமுறைகளை தரப்படுத்துவதற்காக தேசிய மூளைத் தண்டு இறப்புச் சான்றிதழ் வழிகாட்டுதல்கள் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய வழிகாட்டுதல்களையும் அரசாங்கம் வெளியிட்டது.