TNPSC Thervupettagam

இந்தியாவின் உணவு தானிய இருப்பு மற்றும் உற்பத்தி

April 24 , 2026 2 days 74 0
  • இந்தியாவின் உணவு தானிய இருப்பு, தேவையான கையிருப்பு அளவை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் 222 லட்சம் மெட்ரிக் டன் (LMT) கோதுமை மற்றும் 380 LMT அரிசி உட்பட மொத்தம் 602 LMT உணவு தானியங்கள் இருப்பில் உள்ளன.
  • உணவுப் பாதுகாப்பு, விலை நிலைப்படுத்தல் மற்றும் பொது விநியோக முறையின் (PDS) மூலம் விநியோகத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தால் இடையக இருப்பு பராமரிக்கப்படுகிறது.
  • பருப்பு வகைகள் (25.68 மில்லியன் டன் (MT)) மற்றும் சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும், அரிசி, கோதுமை, பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் 2-வது இடத்திலும் உள்ளது.
  • தோட்டக்கலை உற்பத்தி 362.08 MT-ஐ எட்டியுள்ளது, இது உணவு தானிய உற்பத்தியை விட அதிகமாக உள்ளதோடு அதிக மதிப்புள்ளப் பயிர்களை நோக்கிய மாற்றத்தையும் காட்டுகிறது.
  • 2020 ஆம் நிதியாண்டில் (FY) 34.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (USD) இருந்த விவசாய ஏற்றுமதி 2025 நிதியாண்டில் 51.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதோடு இதில் பதப்படுத்தப்பட்ட உணவின் பங்கு 20.4% ஆகும்.
  • மசாலா பொருட்கள் மற்றும் தேங்காய் உற்பத்தியிலும் இந்தியா முன்னணியில் உள்ளதோடு கரும்பு, பருத்தி மற்றும் தேயிலை உற்பத்தியிலும் 2-வது இடத்தில் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்