மானிய விலையில் உரங்களுடன் உயிரி ஊக்கிகளையும் வாங்குவதற்கு விவசாயிகளை கட்டாயப்படுத்துவதை நிறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக, சில்லறை விற்பனையாளர்கள் உயிரி ஊக்கிகளை வாங்காவிட்டால், யூரியா மற்றும் டை அம்மோனியம் பாஸ்பேட் (DAP) போன்ற மானிய விலையில் உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில்லை.
உயிரி ஊக்கிகளானது தாவரங்களில் தாவரக் கூறுகளின் செயல்முறைகளைத் தூண்டும் மற்றும் அறுவடையில் விளைச்சலை அதிகரிக்க உதவும் பொருட்கள் ஆகும்.
தாவரங்களிலிருந்து பெறப்பட்ட கழிவுப் பொருட்கள் மற்றும் கடற்பாசி சாறுகள் சில நேரங்களில் அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய உயிரி ஊக்கிச் சந்தையின் மதிப்பானது 2024 ஆம் ஆண்டில் 355.53 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது.
2025 ஆம் ஆண்டில் 410.78 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இதன் மதிப்பு ஆனது 2032 ஆம் ஆண்டில் 1,135.96 மில்லியன் அமெரிக்க டாலர்களாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் முறையே 1985 ஆம் ஆண்டு உரக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் 1968 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லிச் சட்டத்தால் நிர்வகிக்கப் படுகின்றன.