TNPSC Thervupettagam

இந்தியாவின் முக்கியத் தொழில்கள் உற்பத்தி வளர்ச்சி

November 24 , 2026 4 days 76 0
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவின் ஒன்பது முக்கியத் தொழில்கள் 10.9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, இது கடந்த 31 மாதங்களில் இல்லாத அதிகபட்ச வளர்ச்சியாகும்.
  • நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் மற்றும் இரும்புத் தாது ஆகியவை இந்த ஒன்பது முக்கியத் தொழில்களாகும்.
  • இரும்புத் தாது அதிகபட்சமாக 26.4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது; அதைத் தொடர்ந்து நிலக்கரி (23.1%), மின்சாரம் (21.6%) மற்றும் சிமெண்ட் (15.4%) ஆகியவை உள்ளன.
  • ஆறு துறைகள் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், உரங்கள், இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவை சரிவைச் சந்தித்துள்ளன.
  • தொழில்துறை உற்பத்திக் குறியீட்டில் (IIP) இந்த ஒன்பது தொழில்களும் சுமார் 40% பங்களிப்பைக் கொண்டுள்ளன.
  • திருத்தப்பட்ட முக்கியத் தொழில்களின் குறியீடு (ICI), 2011–12 ஆம் ஆண்டிற்குப் பதிலாக 2022–23 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்துகிறது, மேலும் இரும்புத் தாதுவை ஒன்பதாவது துறையாக உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்