TNPSC Thervupettagam

இந்தியாவின் உள்நாட்டு கண்காணிப்பு வான்வெளிக்கப்பல்கள்

July 17 , 2026 11 days 96 0
  • உள்நாட்டில் அதிக நேரம் தாக்குப் பிடிக்கும் கண்காணிப்பு வான்வெளிக் கப்பல்களுக்காக, வான்வெளிக்கப்பல் அடிப்படையிலான 'அதி-உயர போலி செயற்கைக் கோள்' (AS-HAPS) திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியது.
  • இந்த ₹15,000 கோடி மதிப்பிலான திட்டமானது எல்லைக் கண்காணிப்பு, நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் உளவு (ISR) மற்றும் தகவல் தொடர்புத் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அதி-உயர போலி செயற்கைக்கோளானது (HAPS) அடுக்குமண்டலத்தில் (20-30 கிமீ உயரம்) செயல்படுகின்றன என்பதோடு இவை மாதக்கணக்கில் காற்றில் பறக்கக் கூடியவை.
  • இந்த வான்வெளிக்கப்பல்கள் ரேடார்கள், ஒளியியல் கண்காணிப்பு அமைப்புகள், மின்னணு உளவுத் தகவல் சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்களை எடுத்துச் செல்ல முடியும்.
  • இந்திய விமானப்படை மற்றும் தனியார் துறையின் ஆதரவுடன், மேக்-I (Make-I) கொள் முதல் கட்டமைப்பின் கீழ் இத்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்