இந்தியாவின் உள்நாட்டு கண்காணிப்பு வான்வெளிக்கப்பல்கள்
July 17 , 2026 11 days 95 0
உள்நாட்டில் அதிக நேரம் தாக்குப் பிடிக்கும் கண்காணிப்பு வான்வெளிக் கப்பல்களுக்காக, வான்வெளிக்கப்பல் அடிப்படையிலான 'அதி-உயர போலி செயற்கைக் கோள்' (AS-HAPS) திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியது.
இந்த ₹15,000 கோடி மதிப்பிலான திட்டமானது எல்லைக் கண்காணிப்பு, நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் உளவு (ISR) மற்றும் தகவல் தொடர்புத் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதி-உயர போலி செயற்கைக்கோளானது (HAPS) அடுக்குமண்டலத்தில் (20-30 கிமீ உயரம்) செயல்படுகின்றன என்பதோடு இவை மாதக்கணக்கில் காற்றில் பறக்கக் கூடியவை.
இந்த வான்வெளிக்கப்பல்கள் ரேடார்கள், ஒளியியல் கண்காணிப்பு அமைப்புகள், மின்னணு உளவுத் தகவல் சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்களை எடுத்துச் செல்ல முடியும்.
இந்திய விமானப்படை மற்றும் தனியார் துறையின் ஆதரவுடன், மேக்-I (Make-I) கொள் முதல் கட்டமைப்பின் கீழ் இத்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.