TNPSC Thervupettagam

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி - ஜூன் 2025

June 28 , 2025 4 days 35 0
  • ஜூன் மாதத்தில் இந்தியா ரஷ்ய எண்ணெய் கொள்முதலை அதிகரித்துள்ளது.
  • சவுதி அரேபியா மற்றும் ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து பெறும் ஒட்டு மொத்த அளவை விட அதிகமாக இந்தியாவானது இறக்குமதி செய்கிறது.
  • ஜூன் மாதத்தில் இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 2-2.2 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது.
  • இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகவும், ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வாங்கிய மொத்த எண்ணெய் அளவை விட அதிகமாகவும் உள்ளது.
  • ரஷ்யாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 2025 மே மாதத்தில் ஒரு நாளைக்கு 1.96 மில்லியன் பீப்பாய்கள் (bpd) ஆக இருந்தது.
  • ஜூன் மாதத்தில் அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியும் 439,000 bpd ஆக உயர்ந்துள்ளது என்பதோடு இது முந்தைய மாதத்தில் வாங்கிய 280,000 bpd என்ற அளவிலிருந்து ஒரு மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும்.
  • ஜீன் மாதம் முழுவதும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள அளவின் கணிப்புகள் சுமார் 2 மில்லியன் பீப்பாய்களாக உள்ளன என்ற ஒரு நிலையில், இது முந்தைய மாத கொள்முதலை விடக் குறைவு ஆகும்.
  • உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக இந்தியா உள்ளது.
  • இது வெளிநாட்டிலிருந்து சுமார் 5.1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்கி உள்ளது.
  • இந்தியா நீண்ட காலமாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
  • 2022 பிப்ரவரி  மாதத்தில் உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து அதிக அளவு எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியது.
  • ரஷ்ய எண்ணெயானது (யூரல்ஸ், ESPO, சோகோல்) ஹார்மஸ் நீர்ச்சந்திப் பகுதியில் இருந்து தளவாட ரீதியாகப் பிரிக்கப்பட்டு, சூயஸ் கால்வாய், நன்னம்பிக்கை முனை அல்லது பசிபிக் பெருங்கடல் வழியாக பயணிக்கிறது.
  • மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் கொள்முதலைத் தவிர்ப்பதன் காரணமாக, ரஷ்ய எண்ணெய் இதர மற்ற சர்வதேச விலையை விட குறிப்பிடத்தக்க அளவில் தள்ளுபடியில் கிடைப்பதே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
  • இதன் விளைவாக, மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியானது குறுகிய காலத்தில் 40-44 சதவீதமாக மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது.
  • ஹார்மஸ் நீர்ச்சந்தியானது வடக்கே ஈரானுக்கும் தெற்கே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.
  • இது சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செய்யப்படும் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியப் பாதையாகச் செயல்படுகிறது.
  • குறிப்பாக கத்தார் உள்ளிட்ட பல நாட்டுப் பகுதிகளில் இருந்து வரும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிகளும் இந்த நீர்ச்சந்தி வழியாகவே செல்கின்றன.
  • உலகின் கச்சா எண்ணெய் ஐந்தில் ஒரு பங்கு மற்றும் ஒரு பெரிய LNG ஏற்றுமதிப் போக்குவரத்தில் ஹார்மஸ் நீர்ச்சந்தி வழியாகும்.
  • ஹார்மஸ் நீர்ச்சந்தியானது உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெயையும், முக்கிய LNG ஏற்றுமதி போக்குவரத்திற்குப் பாதையாகவும் உள்ளது.
  • இந்தியாவும் தனது மொத்த கச்சா எண்ணெயில் சுமார் 40% மற்றும் எரிவாயுவில் ஒரு பாதியை இந்த நீர்ச்சந்தி வழியாக இறக்குமதி செய்கிறது.
  • மத்திய கிழக்கு வளைகுடாவிலிருந்து அதன் கடல்வழி கச்சா எண்ணெயில் சுமார் 47 சதவீதத்தை இறக்குமதி செய்யும் ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளர் ஆன சீனாவானது ஹார்மஸ் முற்றுகையால் நேரடியாக பாதிக்கப்படும்.
  • மேலும், ஏற்றுமதியில் சுமார் 96 சதவீதத்தைக் கையாளும் கார்க் தீவு வழியான இந்த ஹார்மஸை எண்ணெய் ஏற்றுமதிக்கு நம்பியிருப்பது ஈரானின் சுய-தடையை எதிர் விளைவானதாக ஆக்குகிறது.
  • சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளும் ஏற்றுமதிக்காக இந்த நீர்ச்சந்தியை பெரிதும் நம்பியுள்ளன.
  • இந்த முற்றுகையின் விளைவாக இறுதியில், இந்தியாவானது அமெரிக்கா, நைஜீரியா, அங்கோலா மற்றும் பிரேசில் ஆகிய சில நாடுகளை நோக்கிச் செல்லக் கூடும், ஆனால் இதனால் அதிக சரக்குக் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்