TNPSC Thervupettagam

இந்தியாவின் எரிசக்திக் கொள்கை - அறிக்கை

January 12 , 2020 2001 days 659 0
  • சர்வதேச எரிசக்தி நிறுவனமானது (International Energy Agency - IEA) இந்தியாவின் எரிசக்திக் கொள்கை என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • நிதி ஆயோக்கின் தேசிய எரிசக்திக் கொள்கையை இந்தியா ஏற்க வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
  • IEA தனது “இந்திய அறிக்கை 2020” என்பதனை நிதி ஆயோக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவின் எண்ணெய் தேவையானது 2020 ஆம் ஆண்டின் ஜூன் – ஜூலை மாதங்களில் சீனாவை முந்தும் (எண்ணெய்த் தேவை அதிகமாக இருக்கும்) என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடாக இந்தியா விளங்குகின்றது என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.
  • உலகின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நாடாக இந்தியா விளங்குகின்றது.
  • இந்த சுத்திகரிப்புப் பொருள்களில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்