1946 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஐக்கிய நாடுகள் சபையில் 5,500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு தீர்மானங்களுக்கு இந்தியா வாக்களித்தது.
சமீபத்தியத் தரவுகளின்படி, இந்தியாவின் வருடாந்திர 'ஆதரவு/ஆம்' எனும் வாக்குகள் சதவீதம் 56% ஆகக் குறைந்துள்ளது என்பதோடு இது 1955 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைவாகும்.
மறுபுறம், அதன் புறக்கணிப்பின் வருடாந்திர சதவீதமானது 44% ஆக அதிகரித்துள்ளது என்ற நிலையில் இது ஐ.நா.வில் இந்தியாவின் வரலாற்றில் மிக உயர்ந்த அளவாகும்.
வாக்களிப்பு முறைகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் ஆனது 2019 ஆம் ஆண்டு வாக்களிப்பு முறைகளில் தொடங்கியது என்பதையும் தரவு எடுத்துக் காட்டுகிறது.
இந்தக் காலக் கட்டத்தில் வருடாந்திர ஆதரவு வாக்குகளின் சதவீதம் 20% முதல் 100% வரை உள்ள சதவீதங்களுக்கு இடையில் உள்ளது.
இந்தக் காலக் கட்டத்தில் புறக்கணிப்பின் சதவீதமும் 0% முதல் 40% வரை ஏற்ற இறக்கமாக இருந்தது.
1990களின் இடைப்பகுதிக்கும் 2019 ஆம் ஆண்டிற்கும் இடையில், ஆதரவு வாக்குகளின் பங்கு சுமார் 75% முதல் 83% வரையிலான அளவில் ஐ.நா.வில் இந்தியாவின் வாக்களிப்பு முறைகள் நிலையானதாக இருந்தது.