TNPSC Thervupettagam

இந்தியாவின் கடற்கரை நீளம்

May 30 , 2025 10 days 85 0
  • இந்தியாவின் கடற்கரையானது 7,516.6 கிலோ மீட்டரிலிருந்து சுமார் 11,098.8 கி. மீட்டர் ஆக அதிகரித்துள்ளதோடு அந்த நீளமானது தற்போது உள்துறை அமைச்சகத்தால் மறு மதிப்பாய்வு செய்யப் பட்டு வருகிறது.
  • 7,516.6 கி.மீ. என்ற நீளமானது முதன்முதலில் 1970 ஆம் ஆண்டுகளில் அந்த நேரத்தில் கிடைக்கப் பெற்ற அளவீட்டு நுட்பங்களின் அடிப்படையில் பதிவு செய்யப் பட்டது.
  • இந்தியாவில் 11 கடலோர மாநிலங்கள் மற்றும் இரண்டு பெரிய தீவுக் குழுக்கள் உள்ளன.
  • 1961 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்தில் இணைந்த கடைசியான கடலோர மாநிலம் கோவா ஆகும் என்ற நிலையில் அதன் பிறகு இணைந்த ஒரே மாநிலம் என்பது 1975 ஆம் ஆண்டில் சிக்கிம் (நிலத்தால் சூழப்பட்டது) ஆகும்.
  • 1970 ஆம் ஆண்டுகளின் முந்தைய மதிப்பீடு இந்தியாவின் கடற்கரையை 1:4,500,000 தெளிவுத் திறனில் காட்டிய வரைபடங்களை அடிப்படையாகக் கொண்டது.
  • தேசிய நீரியல் வரைவு அலுவலகம் (NHO) மற்றும் இந்தியக் கணக்கெடுப்பு ஆகியவை மூலம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • இது 1:250,000 என்ற துல்லிய அளவில் மின்னணு வழிசெலுத்தல் விளக்கப் படங்களைப் பயன்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்