இந்தியாவின் கனமான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் CMS-03
November 6 , 2025 16 hrs 0 min 18 0
இஸ்ரோ நிறுவனமானது, CMS-03 எனப்படும் இந்தியாவின் கனமான தகவல் தொடர்பு செயற்கைக்கோளை 2025 ஆம் ஆண்டு நவம்பர் 02 ஆம் தேதியன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
4,410 கிலோகிராம் எடை கொண்ட CMS-03, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து அதன் திட்டமிடப்பட்ட புவி ஒத்திசைவுப் பரிமாற்றச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப் பட்டது.
இந்த செயற்கைக்கோள் ஆனது 'பாகுபலி' ஏவு கலம் என்றும் அழைக்கப்படும் LVM3-M5 ஏவு கலத்தின் மூலம் ஏவப்பட்டது.
இது முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய தலைமுறை நுட்பத்திலான கனரக சுமை தூக்கும் ஏவு வாகனம் ஆகும்.
CMS-03 என்பது இந்தியா மற்றும் சுற்றியுள்ள கடல் பகுதி முழுவதும் தொலைதொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணைய சேவைகளை வழங்குவதற்காக என்று வடிவமைக்கப் பட்ட ஒரு பல கற்றையிலான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.