TNPSC Thervupettagam

இந்தியாவின் கம்பளி உற்பத்தி 2026

February 10 , 2026 5 days 48 0
  • ராஜஸ்தான் இந்தியாவின் மிகப்பெரிய கம்பளி உற்பத்தி செய்யும் மாநிலமாகும் என்ற நிலையில் மேலும் இது 16,013.50 ஆயிரம் கிலோ (மொத்த உற்பத்தியில் 47.53%) அளவில் பங்களிக்கிறது.
  • ராஜஸ்தானின் கம்பளியானது மார்வாரி மற்றும் சோக்லா இன செம்மறி ஆடுகளிலிருந்து பெறப்படுகிறது என்ற நிலையில், இது முக்கியமாக தரைவிரிப்புகள், கம்பளங்கள் மற்றும் போர்வைகளில் பயன்படுத்தப்படுகிறது.
  • சங்தாங்கி மற்றும் மெரினோ போன்ற சிறந்த தரமான கம்பளிக்குப் பெயர் பெற்ற ஜம்மு காஷ்மீர் 7,770 ஆயிரம் கிலோ உற்பத்தியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்ற நிலையில் இது சால்வைகள் மற்றும் ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • இதில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மூன்றாவது மற்றும் நான்காவது பெரிய உற்பத்தியாளர்களாகும் என்பதோடு இவை முக்கியமாக நடுத்தரம் முதல் கரடு முரடான ராகம் வரையிலான கம்பளியை உற்பத்தி செய்கின்றன.
  • இந்தியாவில் 77.4 மில்லியன் செம்மறி ஆடுகள் உள்ளன என்பதோடு இது உலகளவில் இரண்டாவது அதிக எண்ணிக்கையாகும்.
  • இந்தியாவில் உள்ள கம்பளியின் வகைகளில் தரை விரிப்புத் தரம் (85%), ஆடைத் தரம் (5%), மற்றும் கரடுமுரடான தரம் (10%) ஆகியவை அடங்கும்.
  • பஞ்சாப் மாநிலம் கம்பளி உற்பத்தியில் 22.04% என்ற மிக உயர்ந்த ஆண்டு வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்