இந்தியாவானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதியிலிருந்து உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகளுக்கு அவசர காலப் பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகமானது கோவிஷீல்டு மற்றும் கோவேக்ஸின் ஆகிய 2 தடுப்பு மருந்துகளுக்கு அவசர காலப் பயன்பாட்டு ஒப்புதலை வழங்கியுள்ளது.
மத்திய அரசானது இந்த இயக்கத்தின் கீழ் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்துள்ளது.
தொடக்கத்தில் இது சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 50 வயதிற்கும் மேற்பட்ட மக்கள் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
பயனாளிகளுக்கு ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராஜெனேகாவின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.
கோவிஷீல்டு தடுப்பூசியானது ரூ.200 (1 தடுப்பூசி) என்ற விலையில் கிடைக்கப் பெற உள்ளது.
நிகழ் நேரத் தகவலானது ஒரு தனித்துவ டிஜிட்டல் தளமான ”கோ-வின்” என்ற தடுப்பூசி மேலாண்மை அமைப்பில் கிடைக்கப் பெறும்.
இது கோவிட் தடுப்பு மருந்து நுண்ணறிவு அமைப்பு என்று பெயரிடப்பட்ட ஒரு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தளமாகும்.
இதற்காக மக்கள் தாங்களாகவே கோ-வின் தளம் அல்லது செயலியில் பதிவு செய்ய வேண்டும்.