TNPSC Thervupettagam

இந்தியாவின் சாலைக் கட்டமைப்பு

June 30 , 2026 8 days 88 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (MoRTH) கூற்றுப்படி, இந்தியா தொடர்ந்து உலகின் இரண்டாவது பெரிய சாலைக் கட்டமைப்பைக் கொண்ட நாடாக உள்ளது.
  • நாட்டின் சரக்குப் போக்குவரத்தில் சுமார் 64% மற்றும் பயணிகள் போக்குவரத்தில் 90% சாலைக் கட்டமைப்புகள் மூலமே கையாளப்படுகின்றன.
  • இந்திய சாலைகள் காங்கிரஸின் (IRC) கீழ் நாக்பூர் திட்டம் (1943–1961), பம்பாய் திட்டம் (1961–1981) மற்றும் லக்னோ திட்டம் (1981–2001) உள்ளிட்ட பல்வேறு கட்டங்களின் மூலம் இந்தியாவின் சாலை மேம்பாடு உருவானது.
  • 1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (NHDP) தங்க நாற்கரச் சாலைகள் மற்றும் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு பெருவழித்தடங்கள் போன்ற முக்கியத் தடங்களுக்கு வழிவகுத்தது.
  • தற்போதைய கட்டம் பாரத்மாலா பரியோஜனா மற்றும் பிரதமரின் கதிசக்தி தேசியப் பெருந்திட்டம் (2021) மூலம் ஒருங்கிணைந்த திட்டமிடலில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த அமைப்பு தற்போது இந்தியா முழுவதும் உள்ள தொழில், தளவாட மற்றும் வர்த்தக மையங்களை இணைக்கும் பொருளாதாரப் பெருவழித்தடங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்