TNPSC Thervupettagam

இந்தியாவின் சிறந்த உயர் இலட்சியமிக்க மாவட்டம்

August 30 , 2022 1049 days 477 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, 117 உயர் இலட்சியமிக்க மாவட்டங்களில் ஹரித்வார் மாவட்டத்தை இந்தியாவின் சிறந்த உயர் இலட்சியமிக்க மாவட்டமாக அறிவித்து உள்ளது.
  • நிதி ஆயோக் அமைப்பின் உயர் இலட்சியமிக்க மாவட்டங்கள் திட்டமானது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது சமூக-பொருளாதார மேம்பாட்டின் மூலம் ஒரு மாதிரித் தொகுதிகளாக உருவாகக் கூடிய சாத்திய மிக்க மாவட்டங்களை அடையாளம் காண்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தவும், உள்ளார்ந்த மற்றும் முழுமையான மேம்பாட்டினை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.
  • இதில் சமூக-பொருளாதார மேம்பாட்டினை அளவிடுகின்ற அளவுருக்கள்
    • உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து (30%)
    • கல்வி (30%)
    • வேளாண்மை மற்றும் நீர் வளங்கள் (20%)
    • நிதி உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாடு (10%)
    • உள்கட்டமைப்பு (10%)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்