TNPSC Thervupettagam

இந்தியாவின் சிறுத்தைகள் பாதுகாப்புத் திட்டம்

May 22 , 2026 4 days 57 0
  • சிறுத்தைகள் பாதுகாப்புத் திட்டம் என்பது, இந்தியாவில் அழிந்து போன சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட ஒரு முன்னோடித் திட்டமாகும்.
  • இந்தியாவில் பிறந்த 33 சிறுத்தைகளையும் சேர்த்து, இந்தியாவின் சிறுத்தை எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
  • நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து 20 சிறுத்தைகளைக் கொண்ட ஒரு தொடக்கக் குழுவை இடமாற்றம் செய்வதன் மூலம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என்பதோடு பின்னர், போட்ஸ்வானாவிலிருந்து 9 சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டு இக்குழு வலுப்படுத்தப் பட்டது.
  • குனோ தேசியப் பூங்கா, இந்த இனத்தை நிலைநிறுத்துவதற்கான முதன்மை இடமாக உருவாக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், காந்திசாகர் வனவிலங்கு சரணாலயம், மேலும் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு கூடுதல் வாழ்விடமாகத் தயார் செய்யப் பட்டு உள்ளது.
  • குஜராத்தில் உள்ள பன்னி புல்வெளிகள் உட்பட, புதிய பகுதிகளுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஆயத்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
  • இத்திட்டத்தின் அடுத்த கட்டம் என்பது, கூடுதல் இடமாற்றங்கள் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நௌரதேஹி வனவிலங்கு சரணாலயம் போன்ற புதிய இடங்களை உருவாக்குவதன் மூலம், இந்த இனத்தை ஒருங்கிணைத்து விரிவு படுத்துவதில் கவனம் செலுத்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்