TNPSC Thervupettagam

இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை அறிக்கை 2026

March 11 , 2026 14 hrs 0 min 23 0
  • இந்தியாவின் முக்கிய சுற்றுச்சூழல் சவால்களை முன்னிலைப்படுத்தி, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (CSE) 'இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை அறிக்கை 2026' என்பதை வெளியிட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில் 99% நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டதாகவும், இதனால் 4,419 பேர் உயிரிழந்ததுடன், 17.41 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப் பட்டதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, வாழ்விட நெருக்கடி மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே மனிதக் குடியிருப்புகள் அதிகரிப்பதன் காரணமாக மனித-புலி மோதல்கள் அதிகரித்து வருவதை இது குறிப்பிடுகிறது.
  • இந்திய மக்கள் தொகையில் சுமார் 15% பேர் மட்டுமே தொடர்ச்சியான காற்றின் தரக் கண்காணிப்பு நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிற்குள் வசிப்பதாகவும், பெரும்பாலான பகுதிகளில் போதிய மாசு தரவு இல்லை என்றும் கூறி, காற்று மாசுக் கண்காணிப்பில் உள்ள குறைபாடுகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்