TNPSC Thervupettagam

இந்தியாவின் சூரியசக்தி சந்தை வளர்ச்சி

June 8 , 2026 6 days 96 0
  • ஆண்டுதோறும் சூரியசக்தித் திறன் சேர்ப்பதில் அமெரிக்காவை முந்தி, 2025 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சூரியசக்தி வளர்ச்சிச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தித் திறன் 2014-ஆம் ஆண்டில் 2.8 கிகாவாட்டிலிருந்து (GW) 2025-ஆம் ஆண்டில் 155 GW-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
  • இக்காலகட்டத்தில் நாட்டின் சூரியசக்தித் திறன் சுமார் 5,370% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • புதைபடிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் இந்தியா 50%-ஐத் தாண்டியுள்ளது.
  • பிரதான் மந்திரி சூர்ய கர் முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சூரிய சக்தியை ஏற்றுக்கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்