கடந்த ஏழு ஆண்டுகளில் தனது சூரியசக்தி செயல்திறன் ஆனது 17 மடங்கு அதிகரித்து உள்ள நிலையில் இந்தியாவின் சூரியசக்தி செயல்திறன் சுமார் 45 ஜிகா வாட்டாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை உச்சி மாநாட்டில் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய நாடு உலக மக்கள்தொகையில் 17 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்பதையும் அதன் வரலாற்று ரீதியான ஒட்டுமொத்த உமிழ்வுகளில் 4 சதவீதம் மட்டுமே இந்தியாவின் பங்கு என்பதையும் இந்தியா உணர்த்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்தக் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் 15 சதவிகிதமானது வளிமண்டலத்தில் இருந்து LULUCF (Land Use, Land-Use Change, and Forestry - நிலப் பயன்பாடு, நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் வனவியல்) மூலம் அகற்றப் பட்டது.