TNPSC Thervupettagam

இந்தியாவின் சூரிய ஒளி மின்னாற்றல் (PV) தகடு உற்பத்தித் திறன்

August 27 , 2026 16 hrs 0 min 3 0
  • இந்தியாவின் சூரிய ஒளி மின்னழுத்த (PV) தொகுதி உற்பத்தித் திறன் 100 GW-ஐ எட்டி உள்ளது, ஆனால் இது முக்கிய உதிரிபாகங்களுக்கு பெருமளவில் இறக்குமதியையே நம்பியுள்ளது.
  • இந்தியாவின் தொகுதித் திறன் 2014 ஆம் ஆண்டில் 2.3 GW ஆக இருந்து 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 100 GW ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்கலத்தின் திறன் 25 GW ஆகவும், வேஃபர் (wafer) திறன் சுமார் 2 GW ஆகவும் எட்டியது.
  • பாலிசிலிகானுக்கு 100% நெருக்கமாகவும், வேஃபர்களுக்கு 90% க்கும் அதிகமாகவும், மின்கலங்களுக்கு 60% க்கும் அதிகமாகவும், தொகுதிகளுக்கு 40% க்கும் அதிகமாகவும் இந்தியாவின் இறக்குமதி சார்பு உள்ளது, இதில் சீனா முக்கிய ஆதாரமாக உள்ளது.
  • உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டம், அங்கீகரிக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் பட்டியல் (ALMM) மற்றும் அடிப்படைச் சுங்க வரி (BCD) ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அரசு ஆதரிக்கிறது; PLI திட்டம் 48 GW ஒருங்கிணைந்த PV உற்பத்தி திறனை வழங்கியுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்தியா 106 GW நிறுவப்பட்ட சூரிய ஆற்றல் திறனைக் கொண்டிருந்தது என்ற நிலையில் மேலும் 2030 ஆம் ஆண்டிற்குள் அதன் 280 GW சூரிய இலக்கை அடைய சுமார் 174 GW-ஐ சேர்க்க வேண்டும்.
  • இந்தியாவின் சூரிய ஒளி PV ஏற்றுமதி 2025 நிதியாண்டில் எட்டு மடங்கு அதிகரித்து 1.2 பில்லியன் டாலராக உயர்ந்தது, ஆனால் அதில் 97% அமெரிக்காவிற்குச் சென்றது, இது ஏற்றுமதிச் சந்தைகளை பன்முகப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்