இந்தியாவின் சேவை பரிமாற்றம் சார் வர்த்தகம் 2024/25
July 13 , 2025 14 days 58 0
2003-04 மற்றும் 2013-14 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவின் சரக்குப் பொருட்களின் ஏற்றுமதியானது சுமார் ஐந்து மடங்கு உயர்ந்து, சுமார் 66.3 பில்லியன் டாலரிலிருந்து 318.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அதன் பிறகு, அது கிடைமட்ட நிலையை அடைந்து சரிவு மற்றும் உயர்வைக் கண்டது.
2022-23 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவின் சரக்குகள் ஏற்றுமதியானது 2023-24 ஆம் ஆண்டில் 441.4 பில்லியன் டாலராகவும், 2024-25 ஆம் ஆண்டில் 441.8 பில்லியன் டாலராகவும் மீண்டும் சரிந்துள்ளது.
மறுபுறம், "சேவைப் பரிமாற்றம் சார் வர்த்தகத்திலிருந்து" பெறப்பட்ட வருவாய் ஆனது 2024-25 ஆம் ஆண்டில் 576.5 பில்லியன் டாலராக உயர்ந்தது.
இது 2003-04 ஆம் ஆண்டில் 53.5 பில்லியன் டாலராக இருந்தது.
சேவை சார் வர்த்தகத்தில் சேவைகள் ஏற்றுமதி, பன்னாட்டுப் பணப் பரிமாற்றம் மற்றும் பிற நேரடிப் பரிவர்த்தனைகள் சாராதவை அடங்கும்.
2003-04 ஆம் ஆண்டில் 12.8 பில்லியன் டாலராக இருந்த மென்பொருள் சேவைகள் ஆனது 2024-25 ஆம் ஆண்டில் 180.6 பில்லியன் டாலராக அதிகரித்தது.